Wednesday, 14 September 2011

மலேசிய வேலை வேண்டுமா? ஜூலை 1ம் தேதிக்கு முன் முடிவெடுங்கள்

கோட்டா பாரு, மலேசியா: வெளிநாட்டிலிருந்து வேலைக்காக வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை அடுத்த மாதத்திலிருந்து மலேசியா தற்காலிகமாக நிறுத்தவுள்ளது.

மலேசியாவுக்குள் 2 மில்லியன் வெளிநாட்டவர்கள் உரிய விசா இல்லாமல் தங்கியிருந்துவேலை செய்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களது கேஸ்களைத் துரிதமாக கையாளுவதற்கே, இந்தத் தற்காலிகத் தடை வித்திக்கப்படுகின்றது.

பிரதி அமைச்சர் லீ சீ லியொங் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி, வெளிநாட்டவரின் வேலைக்கான விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவது, ஜூலை 1ம் தேதியிலிருந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

மலேசியாவில் உரிய விசா இல்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் ஒரேயடியாக விசா வழங்கி, அவர்களை சட்டரீதியாக மலேசியாவுக்குள் தங்க அனுமதிக்கலாமா என்பது பற்றி மலேசியா ஆராய்ந்து வருகின்றது.

இந்த முடிவு மலேசிய அரசால் எடுக்கப்பட்டால், தற்போது அங்கு விசா இல்லாமல் தங்கியுள்ள அனைவருக்கும் பிளாங்க் என்டோஸ்மென்ட் முறைப்படி, வேலைக்கான அனுமதியுடன்கூடிய விசா வழங்கப்படும்.

இந்த விவகாரத்தில் முடிவடுத்து நடைமுறைப்படுத்தப்படும்வரை, மலேசியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ஜூலை 1ம் தேதிக்குப் பின், வேலைக்காக விண்ணப்பிப்பது பயனற்றது.

ஆனால், இந்த மாதம் முடிவதற்குள் (ஜூலை 1ம் தேதிக்கு முன்) மலேசியாவுக்குள் சென்றுவிட்டால், கதை வேறு. அவர்களும் பிளாங்க் என்டோஸ்மென்ட் முறைப்படி, வேலைக்கான அனுமதியுடன்கூடிய விசா வழங்கும் திட்டத்துக்குள் வந்துவிடச் சந்தர்ப்பம் உள்ளது.

http://eravursyf.blogspot.com/

No comments: