
அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ஜயன்ட் ஹொக்வீட்’ எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும். இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது.
.மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை. நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment