கட்டாரில் திண்டாடும் இலங்கைப் பட்டதாரிகள்
நாம் எல்லோரும் நாட்டில் இருந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்ன நல்லா உழைத்துக் கொண்டிருக்கின்றனர். என்று நினைக்கின்றோம். அனால் அவர்கள் படும் வேதனைகளும் கஸ்ரங்களும் எண்ணிலடங்கா. அவற்றைப்பற்றியெல்லாம் விரிவாக பதிவிட இருக்கின்றேன். இப்போது பதிவிடும் மனநிலையிலும் நான் இல்லை.
இன்று காலையில் நாம் வேலைவாய்ப்புக்காக வந்த அரச நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அலுவலக உயரதிகாரிகள் வேலை வழங்கப்படாது நாட்டுக்கு செல்லுங்கள். என்று சொல்லிவிட்டனர்.
எங்களுக்கு குறிப்பிட் நிறுவனத்தினால் நேர்முகப்பரிட்சை வைக்கப்பட்டு வீசா அடிக்கப்பட்டு அடையாள அட்டைகூட வழங்கியிருக்கின்றனர்.
நேர்முகப் பரிட்சைகூட எங்களை கேலி செய்வதுபோன்றுதான் அமைந்திருந்தது. எங்கள் தகைமைக்குரிய ஆவணங்கள்கூட பார்க்கப்படவில்லை.
என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி நாட்டில் என்ன வேலை செய்தாய். நான் ஊடகத்தில் வேலை செய்தேன் என்றேன். அப்போ இங்கே எதற்காக வந்தாய் அந்த வேலையை செய்திருக்கலாம்தானே என்றார்.
இன்னும் ஒருவரிடம் தகைமைக்குரிய ஆவணங்களை பார்க்கவோ அல்லது கேள்விகளோ இன்றி 24 + 13 = ? இதுதான் அவருக்கு எழுதிக் கொடுத்து விடை காணச் சொல்லப்பட்டது. அவர் 37 என்று எழுதிக் கொடுத்ததும் ஓகே... குட்.. குட்... போகலாம் என்று அனுப்பிவிட்டார்.
இது ஒருபுறமிருக்க இன்னொருவர் சாரதியாக வந்து கட்டாரில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று (சாரதி பயிற்சிப்பாடசாலையில் கற்று) குறித்த நிறுவனத்துக்கு சாரதியாக வேலையில் சேர்ந்து ஒன்றரை மாதமாகிவிட்டது. அவரை இன்னொரு வேறு நாட்டுக்காரரிடம் ஒப்படைத்து இவருக்கு குறிப்பிட்ட வாகனத்தை ஒட்டுவதற்கு பயிற்சி வழங்கும்படி சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆனால் இவர் ஒழுங்காக வாகணம் ஓட்டவில்லை என்று பலமுறை மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார். ஒன்றரை மாதத்தின் பின் இவர் சரியாக வாகனம் ஓட்டவில்லை என்று கூறி. அவர் கட்டாருக்கு வந்த வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் ஒப்படைத்த இருக்கின்றனர் நாட்டுக்கு அனுப்ப சொல்லி. ஒன்றரை மாதங்கள் வேலை செய்ததற்கு எந்தவித கொடுப்பனவுகளும் இல்லை.
இவர் சாரதி பயிற்சி பாடசாலையில் சாரதி பயிற்சி பெற்றவர். இவருக்கு மீண்டும் பயிற்சி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இத்தனைக்கும்மேல் நாங்கள் வந்த வேலை என்னவென்றால் கழிவுப் பொருட்களைக் கொண்டு பசளை தயாரிக்கும் ஒரு திட்டத்துக்கு. முன்னர் கழிவுப்பொருட்களை பசளை தயாரிக்கும் திட்டம் இங்கே இருந்தாலும். எங்களை புதிதாக உருவாக்கப்பட இருக்கின்ற திட்டத்துக்கே எடுத்திருந்தனர்.
இப்புதிய திட்டத்தக்குரிய ஆரம்ப வேலைகள் இந்த வருடத்தில் நிறைவடையாது என்பதனை அறியக்கூடியதாக இரக்கின்றது.
எது எப்படி இருப்பினும் இங்கு வேலைக்கு வந்தவர்கள் அனைவரம் மிகவும் கஸ்ரப்பட்டவர்கள். தங்கள் குடும்ப கூழ்நிலை காரணமாக வந்தவர்கள். பல இலட்சங்களை வட்டிக்கு வாங்கி வந்தவர்கள். அவர்கள் நாட்டுக்கு சென்றால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டிவரும்.
மிக விரைவில் சொந்த நாட்டிலிருந்து பதிவிடலாம். சொந்தங்களோடு சேரப்போகின்றோம் என்கின்ற நிம்மதிப் பெருமூச்சு ஒருபுறமிருக்க பல இலட்சங்களை இழந்து கடனாளியாக நாட்டக்கு சேல்கின்றோமே என்பதனை நினைக்கும்போது..........................
No comments:
Post a Comment