லண்டன், பிரிட்டன்: தீவிரவாதிகளின் பயிற்சிக் கையேடு ஒன்றைக் கைப்பற்றியுள்ள பிரிட்டிஷ் உளவுத்துறை அதிலுள்ள விஷயம் ஒன்றைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளது. “பெண் உளவாளிகளின் வலையில் சிக்காமல் தப்பித்துக்கொள்ள, பிரிட்டனில் நடமாடும்போது, வேடமிடுவது நல்ல ஐடியா” என்று அதில் கூறப்பட்டிருப்பதே அதிர்வுக்குக் காரணம்!
“பிரிட்டனின் பிசியான நகரங்களில் நீங்கள் ஹோட்டல்களில் தங்கவேண்டிய நிலை ஏற்படலாம். அநேக ஹோட்டல்களின் லாபிகளிலும், வெளியேயும் கவர்ச்சியான பெண்கள் ஹாங்க்-அரவுன்ட் பண்ணிய நிலையில் இருப்பார்கள்.
இவர்களில் பிரிட்டிஷ் உளவுத்துறையின் பெண் உளவாளிகளும் உள்ளனர். உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கும் பெண்களும் உள்ளனர். மிக அழகான இளம் பெண் ஒருவர் உங்களை நெருங்கிவந்து பேசத் தொடங்கலாம். இவர்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் சுலபமான வழி, உங்களை ஒரு GAYயாகக் காட்டிக் கொள்வதுதான்” என விளக்குகிறது அந்தப் பயிற்சிக் கையேடு.
உளவுத்துறையிடம் அகப்பட்டுள்ள தீவிரவாதப் பயிற்சிக் கையேடு, 64 பக்கங்களைக் கொண்டது. இது முழுமையாக ஆங்கிலத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பிறந்த, அல்லது இளவயதிலிருந்தே பிரிட்டனில் வசிக்கும் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கும் கையேடு இது என்று கூறுகின்றது, பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-5.
பிரிட்டனில் நடைபெற்ற அநேக தீவிரவாத நடவடிக்கைகளின்போது அகப்பட்டவர்களின் பெரும்பாலானோர், பிரிட்டிஷ் பிரஜைகளான இளம் வயதினர். இவர்களில் பலர், பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள். 17,18 வயதுவரை சாதாரண இளைஞர்களாக வாழ்ந்தபின், தீவிரவாதக் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள்.
No comments:
Post a Comment