Saturday, 10 September 2011

கொழும்பு: வளைகுடா நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக வேலை வாய்ப்பு பெற்றுச் அங்குச் செல்லும் இலங்கைப் பணிப் பெண்களில் பலர் மரணித்தவர்களாக அவர்களது சடலங்கள் நாடு திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் பெண்களில் குறைந்தது 100 பேர் வருடம்தோறும் இறந்து பிணமாக நாடு திரும்புகின்றனர் என இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இயற்கை விபத்துக்கள், கொலை, பாலியல் துன்புறுத்தல்கள், நேரடித் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு பெண்கள் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டில் 153 பெண்களின் சடலங்களும், 2010ம் ஆண்டில் 218 சடலங்களும் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

http://eravursyf.blogspot.com/

No comments: