Wednesday, 14 September 2011

தவறான ஆட்களின் போன்களை ஒட்டுக் கேட்ட MI-5

லண்டன், பிரிட்டன்: உளவு பார்ப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் தனிப்பட்டவர்களின் போன்களை ஒட்டுக்கேட்கும் பிரிட்டிஷ் உளவுத்துறை MI-5, தீவிரவாத சந்தேக நபர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதாகவே கூறிவந்துள்ளது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் வேறுவிதமாகவுள்ளது.

அதன்படி பிரிட்டிஷ் உளவுத்துறை, தீவிரவாதத்துடன் எவ்வித தொடர்புமற்ற பல அப்பாவிகளின் போன் லைன்களையும் ஒட்டுக்கேட்டு வந்துள்ளது.

“பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்காக போன் ஒட்டுக் கேட்டல் அவசியமாகின்றது” என்று கூறியுள்ள தொலைத் தொடர்பு இடைமறிப்பு கமிஷனின் கமிஷனர் சர் பால் கென்னடி, “சில கேஸ்களில் தவறுகள் நடைபெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறுக்குக் காரணம், தவறான இலக்கங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்வதுதான் என்று தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, தீவிரவாத சந்தேக நபர் ஒருவரில் போன் இலக்கத்தின் கடைசி நான்கு டிஜிட்களும் 7439 என்று இருப்பதை, பதிவு செய்பவர் 7489 என்று பதிவு செய்துவிடுவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகின்றது. அப்படி நடக்கும்போது, தவறான நபரின் போன் உரையாடல்கள் தொடர்ச்சியாகப் பதிவாகின்றன. ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

இப்படித் தவறாக ஒட்டுக் கேட்கப்படுபவர்களின் பெயர்களை, தேசிய பாதுகாப்புக் கருதி வெளியிட முடியாது என்று அறிவித்துள்ளது உளவுத்துறை. இதனால், தமது போன்களை ஒட்டுக்கேட்ட விஷயம் அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே போய்விடுகிறது.

http://eravursyf.blogspot.com/

No comments: