Wednesday, 14 September 2011

9/11 விமான இலக்கங்கள் – மன்னிப்பு கோரியது UA!

சிக்காகோ, அமெரிக்கா: அமெரிக்கா மீதான அல்-காய்தாவின் 9/11 தாக்குதலின்போது உபயோகிக்கப்பட்ட United Airlines விமானங்களின் தட இலக்கங்கள், மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன. இம்முறை தாக்குதல் ஏதுமில்லை. ஆனால், அந்த இலக்கங்களை விமான நிறுவனம் மீண்டும் உபயோகிப்பதுதான் பிரச்சினையாகியுள்ளது.

அல்-காய்தாவின் 9/11 தாக்குதலின்போது United Airlines விமானம் தட இலக்கம் 175, பாஸ்டனிலிருந்து லாஸ்ஏன்ஜலஸ் வெல்லும் வழியில் கடத்தப்பட்டு, நியூயோர்க் இரட்டைக் கோபுரத்தில் மோதியது. அதே தினத்தில் தட இலக்கம் 93, நுவார்க் (நியூ ஜேர்சி) விமான நிலையத்திலிருந்து, சான்பிரான்சிஸ்கோ செல்லும் வழியில் கடத்தப்பட்டு, வாஷிங்டனை நோக்கித் திருப்பப்பட்ட நிலையில், காலி மைதானம் ஒன்றில் வீழ்த்தப்பட்டது.

9/11 தாக்குதலின்பின், குறிப்பிட்ட இவ்விரு தட இலக்கங்களில் பறக்கும் விமானங்களில் பணியாற்ற மாட்டோம் என்று விமானப் பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். அவர்களது சென்டிமென்டுக்கு மதிப்பளித்து, இவ்விரு தட இலக்கங்களையும் உபயோகிப்பதில்லை என நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

கடந்தவாரம் United Airlines வெளியிட்டிருந்த சம்மர் ஸ்கெட்யூலில் இவ்வரு தட இலக்கங்களும் மீண்டும் காணப்பட்டன.

விமானப் பணியாளர்கள் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து United Airlines, நேற்று (வியாழக்கிழமை) இந்தத் தட இலக்கங்களை நீக்குவதாக மீண்டும் அறிவித்துள்ளது. தட இலக்கங்களின் மீள் உபயோகம், தற்செயலாக நடைபெற்றுவிட்டது என்று மன்னிப்பு கோரியுள்ளது United Airlines.

http://eravursyf.blogspot.com/

No comments: