ரியாட், சவுதி அரேபியா: உலகில் முதல்முறையாக, பெண்களுக்கென்றே தனியாக ஒரு பல்கலைக்கழகம் சவுதி அரேபியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரியாட் நகரிலிருந்து 25 கி.மீ. கிழக்கே அமைந்துள்ள இப் பல்கலைக்கழகத்தில் 50,000 மாணவிகள் கல்விகற்க முடியும்.
சவுதி அரேபியாவில், ஆண்கள் கல்வி கற்கும் இடங்களுக்குச் செல்வதில் பெண்களுக்கு ஒருவித தயக்கம் இருக்கின்றது. இதனால் திறமை இருந்தும் பல பெண்களால் மேற்படிப்பைத் தொடரமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.
அதையடுத்தே பெண்களுக்குத் தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது.
சவுதி அரசினால் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், 12,000 மாணவிகளுக்கான ஹாஸ்டல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட பல்கலைக்கழக காம்பவுண்டுக்குள் இதர தங்குமிட வசதிகளுக்காக 1400 வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து கல்வி கற்க வரும் மாணவிகளுக்கும், இந்த வருடத்திலிருந்து அட்மிஷன் வழங்கவுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
No comments:
Post a Comment