கொழும்பு, ஸ்ரீலங்கா: “மலேசிய அரசு, விடுதலைப்புலிகளின் பிரமுகர் ஒருவரைப் பற்றி ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா அமைச்சர் தினேஷ் குணவர்தனே. இவரது கூற்று பலவித குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது.
“விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரைக் கைது செய்துள்ளோம். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. விசாரணைகள் முடிவடைந்ததும் முழுவிபரங்களும் அறிவிக்கப்படும் என்று மலேசிய அரசு, ஸ்ரீலங்கா அரசிடம் தெரிவித்துள்ளது” என்பதே அமைச்சர் குணவர்த்தனேயின் கூற்று.
மலேசிய அரசு, ஸ்ரீலங்காவுக்கு இந்தத் தகவலை வழங்க வேண்டுமென்றால், அமைச்சர் குணவர்த்தனேயிடம் வழங்கியிருக்க முடியாது. ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சின் ஊடாகவே வழங்கியிருக்க முடியும்.
ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சர் இன்றோ, நேற்றோ இப்படியான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.
வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், விடுதலைப்புலிகளைப் பற்றிக் கடைசியாகப் பேசியது எப்போதென்று பார்த்தால், கடந்த வியாழக்கிழமை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். “விடுதலைப்புலிகளுடன் லிங்க் வைத்துள்ள ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற ஒரு வாக்கியத்துடன் அவர் முடித்துக் கொண்டார்.
கோலாலம்பூரிலுள்ள ஸ்ரீலங்கா தூதர் டாக்டர் டி.டி.ரணசிங்கேயிடம் இதுபற்றி விசாரித்தபோது, “அப்படியான கைது நடவடிக்கை ஏதும் நடைபெற்றதாகத் தம்மிடம்தகவல் ஏதுமில்லை” என்று கூறியிருக்கிறார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா அரசு மீடியா சென்டரின் டைரக்டர் ஜெனரல் லக்ஷ்மன் ஹலுகல்லேவும் இதுபற்றித் தனக்கு ஏதும் தெரியாது என்கிறார்.
இதிலிருந்து தெரியவருவது என்ன?
இப்படியொரு கைது நடவடிக்கை மலேசியாவில் நடைபெற்றிருந்தால், வேறு இலாகாகளுக்கே தெரிவிக்காமல் நடாத்தப்படும், ஒரு ரகசிய நடவடிக்கையாக இருக்கலாம்.
No comments:
Post a Comment