Wednesday, 14 September 2011

பரீட்சையில் சித்தியடையும் அனைவருக்கும் கொரியாவில் வேலை!

கொழும்பு, ஸ்ரீலங்கா: இந்த வருடம் கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த அனைவருக்கும் (3000 பேர்) கொரியாவில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்திருக்கின்றது ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலை வாய்ப்பு இலாகா.

“இவ்வருடம் முதல் 6 மாதங்களில், ஆண்களும் பெண்களுமாக 1800 பேர் ஏற்கனவே கொரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பரீட்சையில் சித்தியடைந்த மிகுதி 1200 பேருக்கும் கொரிய வேலைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அடுத்துவரும் வாரங்களில் கொரியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்” என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழிப் பரீட்சைகள் கொழும்பிலுள்ள தென் கொரியத் தூதரகத்தால் நடாத்தப்படுகின்றன. மொழிப் பரீட்சைகளைவிட, பல்வேறு விதமான கொரிய வேலைகளுக்கும் கொழும்பில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

கடந்த வருடத்தின் (2010) தொடக்க மாதங்களில், தென்கொரியாவில் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு காரணமாக வெளிநாட்டவர்களுக்கு தென் கொரியாவில் வேலை வாய்ப்புகள் லேசாகக் குறையத் தொடங்கியிருந்தன. ஆனால், ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடைந்து விட்டது.

கடந்த வருடம் மொத்தம் 8,000 ஸ்ரீலங்காப் பிரஜைகள் வேலை வாய்ப்புக்களைப் பற்று தென் கொரியா சென்றுள்ளனர்.

http://eravursyf.blogspot.com/

No comments: