Wednesday, 7 September 2011

அகால மரணம் என்று சொல்லலாமா?-Can We say Accidently Death?

கேள்வி: ஒருவர் இறந்தால் அகால மரணமடைந்தார் என சிலர் கூறுகின்றனர். இது சரியா? இவ்வாறு சொல்லலாமா?

பதில்: ஒருவர் அவரது (அஜல்) காலதவணை முடியும் முன் மரணிப்பதில்லை. ஒருவருக்கு சிறிதளவு 'ரிஜ்க்' இருக்கும் வரை அவர் உயிர் வாங்கப்படுவதில்லை என்பது அல்குர்ஆனின் சாட்சியம்.

'காலமாகிவிட்டார்' என்றால் அவரது 'ரிஸ்க்' முடிந்து அவருக்காக நிர்ணயிக்கப்பட்ட காலம் நிறைவாகி இறந்து விட்டார் என்பது பொருள்.அகால மரணமாகிவிட்டார் என்றால் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம்(ரிஜ்க்) முடிவடைவதற்கு முன்பே இறந்து விட்டார் என்பது பொருள். இது குர்ஆனுக்கும், ஒரு முஃமீன் நம்ப வேண்டியதற்கும் முற்ற முற்ற முரணாகும். கொலை செய்யப்பட்டு மரணித்தவர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம், அவரது மௌத்துடன் முடிந்தபின்புதான் மரணிக்கிறார். அவர்களது காலம் வந்துவிட்டால் ஒரு மணிநேரம் முந்தவோ மாட்டாது என அல்லாஹு தஆலா கூறுகின்றான்.

ஆதாரம்: ஷரஹு பிக்ஹுல் அக்பர் முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்;ஹு பக்கம் 152.

http://eravursyf.blogspot.com/

No comments: