
பயணிகளை ஏற்றிவரும் தமது நாட்டு விமானம் என்று தெரியாமல், எதிரி விமானம் என்று தவறுதலாகச் சுட்டுவிட்டோம் என்று கூறுகிறது, தென்கொரிய ராணுவம்.
குறிப்பிட்ட விமானம் தென் கொரியாவின் ஏஷியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம். சீனாவிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, தென்கொரியாவின் தலைநகர் சோலிலுள்ள இன்சோன் விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தது.
வழமையாக இந்த நேரத்தில், இந்த ரூட்டில் வரும் விமானம்தான் அது. வித்தியாசமாக ஏதுமில்லை.
விமானம் தரையிறங்கும் நேரம் நெருங்கிய நிலையில், இன்சோன் விமான நிலைய ஏர் ட்ராபிக் கன்ட்ரோல் டவரிடம் தரையிறங்க அனுமதி கோரியிருக்கிறது. அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தின் உயரம் குறைக்கப்பட்டது. இன்சோன் விமான நிலைய ரன்வேயை நோக்கிய பைனல் அப்ரோச் நிலைக்கு வந்தது விமானம்.
அந்த நேரத்தில்தான், விமானத்தை நோக்கி சராமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடைபெறத் தொடங்கியது.
கொரியத் தலைநகர் சோலின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது இன்சோன் விமான நிலையம். அதைவிட இந்த இடத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் உண்டு. அது என்னவென்றால், இந்த விமான நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 25 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது, தென் கொரிய – வட கொரிய எல்லை.
இந்த எல்லைப் பகுதி, எப்போதும் ராணுவப் பதட்டத்துக்கு உட்பட்ட பகுதி. இரு பக்கமும் இரு நாட்டு ராணுவத்தினரும் தமது ஆயுதங்களுடன் எப்போதும் தயாராக இருக்கும் இடம்.
தரையிறங்கும் நிலையிலிருந்த ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானம் சீனாவிலிருந்து வருவதால், அது வரும் திசையிலிருந்து, வட கொரிய விமானமாக இருக்கலாம் என ஊகிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதுதான். ஆனால், தரையிலிருந்து குறிப்பிட்ட விமானத்தின் லோகோவைப் பார்க்க முடியும்.
அப்படியிருந்தும், தென் கொரிய ராணுவம் ஏன் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடாத்தியது? அதற்கு உத்தரவு கொடுத்தது யார்?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண, இன்டேர்னல் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது தென் கொரிய ராணுவம். நல்ல வேளையாக துப்பாக்கி ரேன்ஜிலிருந்து விலகிய தொலைவிலேயே ஏஷியானா ஏர்லைன்ஸ் விமானம் இருந்ததால், விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை.
என்னதான் தவறுதலாக நடைபெற்ற சம்பவமாக இருந்தாலும், ஆபத்தான விளையாட்டுத்தான், இல்லையா?
http://eravursyf.blogspot.com/
No comments:
Post a Comment